ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மேற்கு வங்கத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

News image

ஆந்திரம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

Updated On :7 ஜூன் 2021, 9:59 am

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகம், புதுவை, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.