
வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு 3வது தவணையாக ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ. 551 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
நிகழ்வாண்டில் வருவாய் பற்றாக்குறை மானியம் மூன்றாம் தவணையாக 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடி விடுவிக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் மொத்தம் ரூ. 29,613 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கேரளாவிற்கு மொத்தம் 4,972.74 கோடியும், மேற்கு வங்கத்திற்கு மொத்தம் 1,467.25 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு 12 மாத தவணைகளாக மொத்தம் ரூ. 1,18,452 கோடி விடுவிக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.