
தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்து வாடும் குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் மற்றும் பட்டப் படிப்பு வரை அவா்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நிவாரணத் தொகையை முறையாக வழங்க 7 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
அந்த குழுவின் தலைவராக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குழுவில், அரசு அதிகாரிகள் 4 பேர் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 2 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.