

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், யோகி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனிடையே மூத்த தலைவர் ஜிதின் பிரசாதா காங்கிரஸிலிருந்து விலகி புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை தில்லி சென்றடைந்தார். இதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் மற்றும் கரோனாவைக் கையாண்ட விதம் குறித்த பேச்சுகள் ஆங்காங்கே எழுவதால் தலைவர்களிடமிருந்து கருத்தைக் கேட்டு கட்சியைப் பலப்படுத்த பாஜக முடிவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.