
கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் உள்நாட்டு விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் விமானம் இயக்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 11 மாதங்களாக குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், பிப்.28ஆம் தேதி 2,353 உள்நாட்டு விமானங்களில் 3,13,668 பேர் பயணம் செய்துள்ளனர். பொதுமுடக்கத்திற்கு பிறகு, கடந்தாண்டு மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியதில் இருந்து அதிகமான பயணிகள் நேற்று ஒரே நாளில் பயணம் செய்துள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.