ஹரியாணா பள்ளியில் 54 மாணவர்களுக்கு கரோனா
ஹரியாணாவில் உள்ள பள்ளி விடுதியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.


ஹரியாணாவில் உள்ள பள்ளி விடுதியில் தங்கியிருந்த 54 மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், இந்தாண்டு தொடக்கும் முதல் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஹரியாணாவின் கர்னாலில் உள்ள பள்ளியின் விடுதியில் 54 மாணவர்களுக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி யோகேஷ் குமார் சர்மா கூறியதாவது,
ஹரியானாவின் கர்னாலில் ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 54 மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு விரைந்து, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...