வருகின்ற மே மாதம் முதல் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வரும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புருலியா பகுதியில் பிரசாரம் செய்த மம்தா பேசியதாவது,
தொடர்ந்து திரிணமூல் ஆட்சியில் இருக்கும். நீங்கள் தொடர்ந்து இலவச ரேஷன் பொருள்களை பெறுவீர்கள். நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து ரேஷன் பொருள்களை வழங்குவோம். வரும் மே மாதத்திற்கு பிறகு நீங்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் பேசுகையில், எனக்கு பாஜக தேவையில்லை, காங்கிரஸ் - இடதுசாரிகளை விரும்பவில்லை, பாஜகவிடமிருந்து விடைபெறுங்கள் என எதிர்கட்சிகளுக்கு எதிராக மம்தா முழக்கங்களை எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


