

நாட்டில் இதுவரை 5.46 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 15,20,111 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,46,65,820 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்கள் முதல் டோஸ் | சுகாதாரத்துறை ஊழியர்கள் இரண்டாம் டோஸ் | முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ் | முன்களப்பணியாளர்கள் இரண்டாம் டோஸ் | 60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் டோஸ் | 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் முதல் டோஸ் | மொத்தம் | |
| மொத்த எண்ணிக்கை (69 நாள்கள்) | 80,18,757 | 50,92,757 | 85,53,228 | 33,19,005 | 2,42,50,649 | 54,31,424 | 5,46,65,820 |
| இன்று | 37,908 | 30,967 | 74,750 | 81,624 | 9,95,387 | 2,99,475 | 15,20,111 |
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.