ஆற்காட்டில் திமுக வேட்பாளர் வெற்றி

ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் 19,257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆற்காட்டில் திமுக வேட்பாளர் வெற்றி
ஆற்காட்டில் திமுக வேட்பாளர் வெற்றி
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் 19,257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து அவர் ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதியில் 2 - ஆவது முறையாக எம்எல்ஏ வாக பதவி ஏற்க உள்ளார்.

ஆற்காடு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணியளவில் தொடங்கியது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,அதிமுக கூட்டணி பாமக  சார்பில் கே.எல்.இளவழகன், அமமுக சார்பில் என் ஜனாத்தனன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏ ஆர் முஹமது ரபி,நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.கதிரவன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அதிமுக கூட்டணி பாமக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.எல்.இளவழகன் என்பவரைவிட 19,257 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தொடர்ந்து 2 - ஆவது முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ வாக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற அவருக்கு திமுக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்க்ள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்..

ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ( திமுக ) - 1,02,667

கே.எல்.இளவழகன் (பாமக) - 83,410 

இதில் அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட 10 வேட்பாளர்கள் வைப்புத்தொகை இழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com