கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

நாகை மாவட்டம், கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார். 
கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம், கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றார். 

நாகை மாவட்டத்துக்குள்பட்ட கீழ்வேளூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது. இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலிக்கும், பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கும் இடையே நேரடி போட்டி இருந்தது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி முன்னிலை பெற்று வந்தார். 18 சுற்றுகளாக நடைபெற்ற இத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் நிறைவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி 16,985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 

இருவரின் வாக்கு விவரம் :  நாகை மாலி (மார்க்சிஸ்ட்) - 67,988. வடிவேல் ராவணன் (பாமக) - 51,003.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com