

கரோனா பொதுமுடக்கம் தொடர்பாக ஆலோசிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை(மே 9) காலை கூடுகிறது.
தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மே 10 முதல் 24 வரை முழுப் பொதுமுடக்கத்தை தமிழக அரசு இன்று காலை அறிவித்துள்ளது.
இந்நிலையில், முழுப் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க நாளை காலை 11.30 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.