ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டை கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூ
ராணிப்பேட்டை கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் நிவாரண நிதியினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் நிவாரண நிதியினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
Published on
Updated on
1 min read


ராணிப்பேட்டை கற்பகம் கூட்டுறவு நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை சார்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கரோனா நிவாரணம் ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். இதன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3,28,207 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 65 கோடியே 64 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தக் கரோனா நிவாரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி வழங்குவதாக இருந்தது ஆனால் பொது முடக்கம் காரணமாக மக்கள் படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இது போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஆட்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. ஆனால் தற்போது ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் எளிமையாக நடத்தப்படுகிறது. காரணம் மக்கள் வரிப்பணம் வீணாக கூடாது என்பதனாலும் மக்கள் வரிப்பணம் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் எண்ணங்களே காரணம் இதுவே மக்களாட்சி என்றார்.

அதேபோல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களிலும் கூட எந்த ஒரு கட்சி பெயரையும் குறிப்பிடாமல் தமிழக அரசு என்று மட்டுமே குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது எனச் சுட்டிக் காட்டினார்.

அதைத்தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா முதற்கட்ட நிவாரண நீதியான ரூ. 2 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ .எல். ஈஸ்வரப்பன் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குடும்ப அட்டைதாரர்களும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com