
டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மகாராஷ்டிரத்தில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் (டவ்-தே) இன்று 17.5.2021 காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தற்போது டையூவிலிருந்து 160 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பை கடல் பகுதியிலிருந்து 140 திசையில் நகர்ந்து இன்று இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன், அதீத கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்து நிவாரணப் பணிகளை விரைந்து செய்யுமாறு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.