பயனர் தனியுரிமைக்கு மட்டுமே முன்னுரிமை: டெலிகிராம் நிறுவனம்

எங்கள் செயலி தொடங்கப்பட்ட நாள் முதல் பயனர் தனியுரிமைக்கு முன்னிரிமை அளித்து வருகிறோம் என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனர் தனியுரிமைக்கு மட்டுமே முன்னுரிமை: டெலிகிராம் நிறுவனம்

எங்கள் செயலி தொடங்கப்பட்ட நாள் முதல் பயனர் தனியுரிமைக்கு முன்னிரிமை அளித்து வருகிறோம் என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் சர்சைக்குரிய தனியுரிமைக் கொள்கை தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்த கொள்கை தொடர்பாக இந்திய அரசு வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு கடிதமும் எழுதியுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக இருக்கும் டெலிகிராம் செயலியை பலர் பதிவிறக்கம் செய்ய தொடங்கியுள்ளனர்.

மேலும், டெலிகிராம் செயலி குறித்து அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது,

பயனர்களின் செய்தி பரிமாற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மற்ற செயலிகளை போல் மூன்றாம் தளத்தை சார்ந்து இல்லை, இதனால் பின்-கதவு மூலம் தரவுகளை திருட வாய்ப்பில்லை. 

எங்கள் வெற்றி மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான காரணம், பயனர்கள் தங்கள் தரவு, தனியுரிமை மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி முழுமையான புரிதலைக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். 

டெலிகிராம் இது ஒரு பயனர் சார்பு தளம். இதில் உயர்ந்த மற்றும் தனித்துவமான அம்சங்களை வழங்கி வருகிறோம். இதில் உள்ள சிறப்பம்சங்களை போட்டி செயலிகளில் வழங்கவில்லை.

பயனர் தனியுரிமைக்கு மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறோம்.  நாங்கள் செயலி தொடங்கிய நாளிலிருந்து எங்கள் கொள்கைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 

செயலி தொடங்கி ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பயனர் தரவு தனியுரிமைக்கான உறுதியான கட்டமைப்பை உருவாக்குகிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும், 2013 முதல் ஒரு திறந்த மூல தளமாக இருந்து வரும் டெலிகிராம் செயலியின், மூலக் குறியீடு, நெறிமுறை மற்றும் ஏபிஐ (பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்) ஆகியவற்றை யார் வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்.

கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் சரிபார்க்கக்கூடிய கட்டமைப்பை ஆதரிக்கும் உலகின் ஒரே உடனடி செய்தி பயன்பாடு டெலிகிராம் ஆகும். எந்தவொரு பின்னூட்டத்திற்கும், எந்த நேரத்திலும், எங்கள் அமைப்புகளை மதிப்பாய்வு செய்ய பாதுகாப்பு நிபுணர்கள் வரலாம்.

டெலிகிராமின் அனைத்து அம்சங்களும் இலவசமாகவே அளிக்கப்படுகிறது, எதிர்காலத்திலும் இது இலவசமாகவே இருக்கும்.

விரைவில் பயனர்களுக்காக மறைகுறியாக்கப்பட்ட குழு வீடியோ அழைப்பு அம்சத்தை சேர்க்கப் போகிறது, அதைத் தொடர்ந்து திரை பகிர்வு விருப்பங்கள் மற்றும் சத்தம்-ரத்துசெய்தல் போன்றவை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் அல்லது சேமிப்பகத்தின் அடிப்படையில் எந்த தடையும் இல்லாமல் பயனர்கள் முழு அளவிலான வீடியோ கான்பரன்சிங் கருவியை அனுபவிக்க இது உதவும்.

இறுதியாக, பயனர் தரவு சேகரிப்பு மற்றும் எந்தவொரு மூன்றாம் தரப்பு தளங்களுடனும் அல்லது விளம்பர நிறுவனங்களுடனும் பகிர்வதை நாங்கள் கண்டிப்பாக எதிர்க்கிறோம். டெலிகிராமில் பெரிய சேனலை இயக்க கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படும் வணிக பயனர்களுக்காக புதிய கட்டண அம்சத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப், தனது தனியுரிமை கொள்கைகளில் அண்மையில் மாற்றங்களைப் புகுத்தியது. அச் செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் தனியுரிமை தொடா்பான தகவல்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட உறுப்பு நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்வது புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமாகும்.

இந்தச் சூழலில், புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் கைவிட வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக 7 நாள்களுக்குள்ளாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com