
அண்டார்டிகாவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏ-76 என்ற பெயர் கொண்ட பனிப்பாறை வெடல் கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதந்து கொண்டுள்ளது. இதனால் நீரின் மட்டம் உயர்ந்து, பல கரையோர நகரம் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.
இந்த பாறை, 4,320 சதுர கி.மீ., 175 கி.மீ. நீலமும், 25 கி.மீ. அகலமும் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனார். இது தில்லி நகரைவிட 3 மடங்கு பெரியதாகும்.
கடந்தாண்டு உடைந்து விழுந்த ஏ-23ஏ என்ற பனிப்பாறையைவிட ஏ-76 பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.