கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு: மும்பை சந்தைகளில் குவிந்த மக்கள்

மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.
மும்பை சந்தையில் குவிந்த மக்கள்
மும்பை சந்தையில் குவிந்த மக்கள்

மகாராஷ்டிரத்தில் காய்கறி, மளிகை கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது.

மாநிலம் முழுவதும் கரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவியதையடுத்து மே 1ஆம் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மளிகை, காய்கறி, பழக்கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காய்கறி, பழம், மளிகை கடைகள், பால்பண்ணைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து வகையான உணவுக் கடைகளும் காலை 7 மணிமுதல் 11 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு இன்று அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மும்பையின் தாதர் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

மகராஷ்டிரத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சந்தைகளில் மக்கள் குவிந்து வருவதால் தொற்றின் பரவல் அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com