கரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை
By ANI | Published On : 04th February 2021 03:43 PM | Last Updated : 04th February 2021 03:43 PM | அ+அ அ- |

கரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை
கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்து வருவதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் நிலைமை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய ராஜேஷ் பூஷண் பேசியதாவது,
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 70 சதவீதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
கடந்த 3 வாரங்களில் 47 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதே காலகட்டத்தில் 251 மாவட்டங்களில் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை.
மேலும், நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 5,912 அரசு முகாம் மற்றும் 1,239 தனியார் முகாங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது என்றார்.