மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் விருப்பம்: ராஜ்நாத் சிங்
By ANI | Published On : 26th February 2021 04:16 PM | Last Updated : 26th February 2021 04:26 PM | அ+அ அ- |

அமைச்சர் ராஜ்நாத் சிங்
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி செய்ய மக்கள் விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தின் பலூர்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில்,
மேற்கு வங்கத்தில் எங்கள் பேரணிகளில் மக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். இது மம்தா அரசை வெளியேற்றி, பாஜகவை ஆட்சியில் அமர வைக்க மக்கள் விரும்புவதை காட்டுகிறது.
நாங்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த மாட்டோம். ஆனால் நீதி மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில், “அனைவருக்கும் நீதி, யாரையும் திருப்திப்படுத்த மாட்டோம்” என்பது எங்கள் கொள்கையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...