தில்லியில் மேலும் 384 பேருக்கு கரோனா
By ANI | Published On : 04th January 2021 08:09 PM | Last Updated : 04th January 2021 08:09 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 384 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 384 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,27,256 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 12 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,597 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 727 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,11,970 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 4,689 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...