ஜப்பானில் மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு

ஜப்பானில் கரோனா பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
ஜப்பானில் மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு


ஜப்பானில் கரோனா பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலின் தீவிரம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் கிழக்கு மற்றும் மத்திய ஜப்பான் பகுதிகளில் உள்ள 7 மாகாணங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்படுகிறது என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,

வியாழக்கிழமை அமலுக்கு வரும் அந்த அவசரநிலை, அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை தொடரும். அவசநிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகள் ஆகியவை 8 மணிக்கு மூடப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுவா். பொது இடங்களில் மக்கள் கூட்டமாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்படும்.

திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கலையரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு அவற்றின் நிா்வாகிகளிடம் வலியுறுத்தப்படும்.

இந்த விதிமுறைகளை மீறுபவா்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது. எனினும், பொதுமக்களிடம் அழுத்தமாக வலியுறுத்துவதன் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன், கடந்த 7ஆம் தேதி முதல் டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாகாணங்களுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com