வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது: உயர்நீதிமன்றம்
By DIN | Published On : 09th June 2021 01:42 PM | Last Updated : 09th June 2021 01:42 PM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்றம்
வனப்பகுதியில் உள்ள ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க தமிழக அரசு விடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் நடுவட்டம் கிராமத்தில் உள்ள தனியார் விடுதிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கூறியதாவது,
வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பு செய்ய தமிழக அரசு விடக்கூடாது. நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.