யூடியூபர் மதனின் மனைவிக்கு ஜூன் 30 வரை நீதிமன்றக் காவல்

யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் பப்ஜி விளையாட்டு வீரர் யூடியூபர் மதன் தலைமறைவான நிலையில் அவரது மனைவிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் மதனின் மனைவிக்கு ஜூன் 30 வரை நீதிமன்றக் காவல்

யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் பப்ஜி விளையாட்டு வீரர் யூடியூபர் மதன் தலைமறைவான நிலையில் அவரது மனைவிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூடியூப்பில் நேரலை செய்து வந்தவர் பப்ஜி மதன் என அறியப்படும் மதன். இவர் விளையாட்டின் இடையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பதிவிட்டு வந்தார். 

பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அநாகரீகமான முறையில் பேசி வந்த நிலையில் பப்ஜி மதனை கைது செய்ய வேண்டும் என புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். நேரில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவானார். 

இதனையடுத்து அவர்மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மதனின் மனைவி கிருத்திகாவை விசாரித்த காவல்துறையினர் மதனுடன் இணைந்து அவரது மனைவியும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பப்ஜி மதனின் மனைவியை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நேரலை விளையாட்டின்போது எதிர்தரப்பில் மதனுடன் பேசியது அவரது மனைவிதான் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனின் மனைவிக்கு ஜூன் 30 வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரலாம் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. புகார் அளிப்பவர்களின் ரகசியங்களும் காக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com