புதுவையில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூன் 30 வரை நீட்டித்து புதுவை அரசு அறிவித்துள்ளது.
புதுவையில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
புதுவையில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூன் 30 வரை நீட்டித்து புதுவை அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் கடந்த மாதம் முதல் புதுச்சேரியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே கடந்த ஜூன் 14ஆம் தேதி மீண்டும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அந்தப் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமையோடு நிறைவடைந்ததை அடுத்து, புதுவை அரசு சார்பில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்க கட்டுப்பாடுகள், ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து திங்கள்கிழமை இரவு உத்தரவிடப்பட்டது.

புதிய தளர்வுகள்:

1. திரைப்படம் மற்றும் சின்னத்திரைக்கான படப்பிடிப்பை 100 பேரைக் கொண்டு நடத்திக் கொள்ள அனுமதி
2. மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி
3. பூங்காக்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்க அனுமதி
4.அனைத்து தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்பட அனுமதி
5. பொதுப் போக்குவரத்துக்கு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6. திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com