மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் - இடதுசாரிகள் ஆலோசனை

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் - இடதுசாரிகள் ஆலோசனை
மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் - இடதுசாரிகள் ஆலோசனை


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் 8 கட்டமாக நடக்கவுள்ளது. அத்தோ்தலில் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனா். தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இத்தகைய சூழலில், தோ்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனவரி மாதத் தொடக்கம் முதல் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நிலையில் முதற்கட்டமாக 193 தொகுதிகளுக்கான பங்கீடு கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது.

இந்நிலையில், அடுத்த கட்ட தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பிரசாரம் குறித்து கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அவை தனித்தனியாகப் போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com