ஸ்ரேயஸ் அரைசதம்: இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 12th March 2021 09:00 PM | Last Updated : 12th March 2021 09:01 PM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 125 ரன்கள் இலக்கு நிர்ணயம்.
இன்று நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சில் துவக்க வீரர்கள் தவான்(4), ராகுல்(1) மற்றும் கேப்டன் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் இந்தியாவின் தொடக்க வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.
அடுத்து களமிறங்கிய பண்ட், ஸ்ரேயால் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும், அதிக நேரம் தாக்கு பிடிக்காத பண்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின் வந்த ஹர்திக் பாண்டியா சிறிது நேரத்தில் ஆர்ச்சர் பந்தில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தாகூர் டக் அவுட்டானார்.
கடைசி வரை நின்று ஆடிய ஸ்ரெயால் அரைசதம் கடந்து 67 ரன்களில் 20வது ஓவரில் அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.