மார்ச் 14-ல் திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு
By ANI | Published On : 12th March 2021 02:58 PM | Last Updated : 12th March 2021 03:19 PM | அ+அ அ- |

மார்ச் 14-ல் திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு
திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதிமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் மார்ச் 11ஆம் தேதி கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிடவிருந்த நிலையில், புதன்கிழமை இரவு பிரசாரத்தின் போது ஏற்பட்ட கால் எலும்பு முறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 14) தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.