

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது இந்திய அணி.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டி20 ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 3வது ஓவரில் அவுட்டானார். மறுமுனையில் ஆடிய கே.எல்.ராகுல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பண்ட், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், அரைசதம் கடந்த சூர்யகுமார் 57(31) ரன்களில் சாம் கரன் பந்தில் அவுட்டானார். பண்ட் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரேயல் ஐயர் 37(18) ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சர்துல் தாகூர் 10 ரன்களில் அவுட்டாகாமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 185 ரன்கள் குவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.