மார்ச் 27-ல் முதல்முறையாக பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி
By DIN | Published On : 25th March 2021 03:44 PM | Last Updated : 25th March 2021 03:46 PM | அ+அ அ- |

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
தமிழகத்திற்கு மார்ச் 27ஆம் தேதி முதல்முறையாக பிரசாரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வரும் மார்ச் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் முதல்முறையாக தமிழக பிரசாரத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 4ஆம் கட்டமாக சேலத்தில் வரும் 28 ஆம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி ஏப்ரல் 2ஆம் தேதி அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...