கரோனா நிவாரண நிதியாக ரூ. 5 கோடி வழங்கியது ஜோஹோ நிறுவனம்
By DIN | Published On : 13th May 2021 11:49 AM | Last Updated : 13th May 2021 12:46 PM | அ+அ அ- |

கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ஜோஹோ நிறுவனம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனம் சார்பில் கரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 5 கோடியை தமிழக முதல்வரை சந்தித்து நிறுவனத்தின் குமார் வேம்பு அளித்தார்.