தமிழகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,
சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 1500, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 25 நிர்ணயம்.
ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 2000, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 50 நிர்ணயம்.
வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.க்கு ரூ. 4000, கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ. 100 நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.