கூடுதல் கட்டுப்பாடுகளால் திருப்பூர் மாநகரில் வாகனச் சோதனை தீவிரம்: வெறிச்சோடியது தென்னம்பாளையம் மார்க்கெட்

தமிழக அரசின் கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக திருப்பூர் மாநகரில் வாகனச் சோதனையை காவல் துறையினர் சனிக்கிழமை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கூடுதல் கட்டுப்பாடுகளால் திருப்பூர் மாநகரில் வாகனச் சோதனை தீவிரம்: வெறிச்சோடியது தென்னம்பாளையம் மார்க்கெட்

திருப்பூர்: தமிழக அரசின் கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக திருப்பூர் மாநகரில் வாகனச் சோதனையை காவல் துறையினர் சனிக்கிழமை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், காய்கறி, மளிகைக் கடைகள், தேநீர் விடுதிகளில் பொதுமக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை விதித்து. 

இதன்படி, மளிகை, காய்கறி கடைகள் காலை 6 முதல் 10 மணி வரையில் மட்டுமே செயல்படும் என்றும், தேநீர் விடுதிகள் செயல்படத்தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், திருப்பூர் மாநகரில் காவல் துறையினர் சனிக்கிழமை காலை முதலே வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம், காங்கயம் சாலை, சந்திராபுரம் சோதனைச்சாவடி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், எம்.ஜி.பி.சந்திப்பு ஆகிய இடங்களில் இரும்புத் தடுப்புகள் வைத்து வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன், இதே போல் மீண்டும் வெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

வெறிச்சோடியது தென்னம்பாளையம் மார்க்கெட்:  திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காலை 6 முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. 

இந்த நிலையில், மார்க்கெட்டில் விதிகளை மீறி காலை 10 மணிக்கு மேல் செயல்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 
மேலும், மாநகரின் முக்கியச் சாலைகளான பி.என்.சாலை, மங்கலம் சாலை, புஷ்பா ரவுண்டான, அவிநாசி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகனப் போக்குவர்த்து குறைவாகவே காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com