‘என்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாம்’: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
By DIN | Published On : 19th May 2021 07:01 PM | Last Updated : 19th May 2021 07:01 PM | அ+அ அ- |

மு.க.ஸ்டாலின்
கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளின் போது திமுகவினர் என்னை சந்திக்க முயற்சிக்கவேண்டாம் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா நிவாரணம் மற்றும் தடுப்பு பணிகளுக்காக இரண்டு நாள் பயணமாக நாளை முதல் சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்யவுள்ளார்.
இந்நிலையில், திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில்,
கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளின் போது திமுகவினர் என்னை சந்திக்க முயற்சிக்கவேண்டாம். நான் தங்கும் இடங்களில் என்னை சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது.
என்னுடைய பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. எனக்கு வரவேற்பு தரும் எண்ணத்தில் கட்சிக் கொடிகள், பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G