அம்மாபேட்டை பேரூராட்சியில் மாரடைப்பால் திமுக வேட்பாளர் பலி
அம்மாபேட்டை பேரூராட்சி 2 -வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சித்து ரெட்டி (62), மாரடைப்பால் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.


பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி 2 -வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சித்து ரெட்டி (62), மாரடைப்பால் வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த உமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்தவர் கெங்குரெட்டி மகன் சித்துரெட்டி (62). திமுக நிர்வாகியான இவர் அம்மாபேட்டை பேரூராட்சி, 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக இரவு, பகலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், உறவினர்கள் பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஈரோடு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செல்லும் வழியில் சித்துரெட்டி உயிரிழந்தார். திமுக வேட்பாளர் உயிரிழந்ததால் இந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டு திமுக வேட்பாளர் ஐயப்பன் புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அம்மாபேட்டை பேரூராட்சியில் மேலும் ஒரு திமுக வேட்பாளர் உயிரிழந்தது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...