புதுவையில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க சட்டப்பேரவையை ஒரு வாரம் நடத்த வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

புதுவையில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க சட்டப்பேரவையை ஒரு வாரம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.
புதுவையில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க சட்டப்பேரவையை ஒரு வாரம் நடத்த வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

புதுவையில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க சட்டப்பேரவையை ஒரு வாரம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து, மனு அளித்து வலியுறுத்திய புதுச்சேரி திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான ஆர். சிவா எம்எல்ஏ கூறியதாவது:

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவை கூட்ட தொடர் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் கூடவுள்ளது. புதுச்சேரியில் உள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து பேசவதற்காக, ஒருவார காலம் பேரவைக் கூட்டம் நடைபெறும் வகையில் கூட்ட வேண்டும். 

புதுவையிலும் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்துவது, பிரதமர் சொன்ன பெஸ்ட் புதுச்சேரி திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும், புதுவையில் ஸ்மார்ட் சிட்டி தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. 

புதுவையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளுக்கு நிவாரண நிதி உதவி வழங்கப்படவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்த வில்லை. புதுவையில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை.

இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளில் அரசு எந்த நிலைப்பாடில் உள்ளது என்பது குறித்து விவாதித்து பேச, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரி, சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கென்னடி, ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com