10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By DIN | Published On : 25th February 2022 01:43 PM | Last Updated : 25th February 2022 01:48 PM | அ+அ அ- |

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பிப்.27-ல் கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லையில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.