பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழு ஆய்வு
By DIN | Published On : 25th February 2022 12:43 PM | Last Updated : 25th February 2022 12:43 PM | அ+அ அ- |

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக்குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ய சென்றனர்.
கம்பம்: மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர் வெள்ளிக்கிழமை பெரியாறு அணை பகுதியில் ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையை உச்சநீதிமன்ற உத்தரவுபடி பருவ கால நிலை மாறுபாட்டுக்கு ஏற்ப வெள்ளிக்கிழமை மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளரும், மத்திய கண்காணிப்பு துணைக்குழு தலைவருமான சரவணக்குமார் வெள்ளிக்கிழமை முல்லைப் பெரியாறு அணை பகுதிகளுக்கு சென்றார்.
உடன் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் சென்றனர்.
முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மண் அணை, நீர் கசியும் சீப்பேஜ் வாட்டர் அளவு மற்றும் நீர்வழி போக்கிகளை இயக்கி ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் மதிய நேரத்திற்கு பின்பு நடைபெற உள்ளது. கூட்டத்தின் முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...