பெரியாறு அணை துணைக் கண்காணிப்பு குழு கூட்டத்தைப் புறக்கணித்த தமிழக பொறியாளர்கள்

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்திய மத்திய கண்காணிப்பு துணைக்குழுவினர் கூட்டிய கூட்டத்தை தமிழக பொறியாளர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மத்திய கண்காணிப்பு குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த தமிழக பொறியாளர்கள்.
மத்திய கண்காணிப்பு குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த தமிழக பொறியாளர்கள்.

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய மத்திய கண்காணிப்பு துணைக்குழுவினர் குமுளியில் கூட்டிய கூட்டத்தில் தமிழக பொறியாளர்கள், பல ஆண்டுகளாக அணைகள் பலப்படுத்தும் வேலைகளை தாமதப்படுத்துவதை கண்டித்தும், தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல இடையூறு செய்வதை கண்டித்தும் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையை உச்சநீதிமன்ற உத்தரவுபடி பருவ கால நிலை மாறுபாட்டுக்கு ஏற்ப மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளரும், மத்திய கண்காணிப்பு துணைக்குழு தலைவருமான சரவணக்குமார் வெள்ளிக்கிழமை முல்லைப் பெரியாறு அணை பகுதிகளுக்கு சென்றார். உடன் தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் சென்றனர்.

முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மண் அணை, நீர் கசியும் சீப்பேஜ் வாட்டர் அளவு மற்றும் நீர்வழி போக்கிகளை இயக்கி ஆய்வு செய்தனர்

இதைத்தொடர்ந்து, துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் மதிய நேரத்திற்கு பின்பு குமுளி 1-ஆம் மையிலில் உள்ள மத்திய கண்காணிப்பு குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மத்திய கண்காணிப்பு குழுவினர்.
முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த மத்திய கண்காணிப்பு குழுவினர்.

கூட்டத்தில் மத்திய கண்காணிப்பு குழு துணைத் தலைவர் சரவணகுமார் பேசும்போது, அணைப்பகுதியில் பல்வேறு பணிகளைச் செய்யவில்லை என்று குறை கூறினார்.

அப்போது பதில் கூறிய கோட்ட பொறியாளர் சாம் இர்வின், இதுவரை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என்று கூறுகின்ற நேரத்தில், அதற்கான தளவாடப் பொருட்கள் கொண்டு அணை பகுதிக்கு கொண்டு செல்ல கேரள வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு செய்து கொண்டே இருக்கின்றனர், தொடர்ந்து கேரள அரசு இடையூறு செய்கிறது.

ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கும் கோரிக்கைகளை, இதுவரை மத்திய கண்காணிப்பு குழுவும் ஏற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com