சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்

சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த  1726 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்
Published on
Updated on
1 min read

சிதம்பரம்: சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் வீட்டில் பெட்டி பெட்டியாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த  1726 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்து,  தப்பி ஓடிய அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள இவர், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புதுச்சேரி மதுபான பாட்டிகளை விற்பனை செய்து வருவதாக பரங்கிப்பேட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் வியாழக்கிழமை நள்ளிரவு காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 36 பெட்டிகளில் சுமார் 1.50 லட்சம் மதிப்புள்ள 1726 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மது பாட்டில்களை கடத்தி வரப்பட்ட காரையும்  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

மேலும், இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்தது சம்பந்தமாக விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் சத்யமூர்த்தி மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சத்தியமூர்த்தியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com