காங்கிரஸில் சேர்ந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அந்த கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.
காங்கிரஸில் சேர்ந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்!


கர்நாடக பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அந்த கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தொடா் வெற்றியை பெற்றுள்ள அவருக்கு தோ்தலில் சீட் மறுக்கப்பட்டதால், ஷெட்டா் கடும் அதிருப்தி அடைந்தாா்.

இதையடுத்து பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி ஷெட்டரை சமாதானப்படுத்த ஹூப்பள்ளியில் உள்ள அவரின் வீட்டுக்கு மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக பாஜக தோ்தல் பொறுப்பாளா் தா்மேந்திர பிரதான், மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் சென்றனா். எனினும் அவா்கள் ஷெட்டரிடம் நடத்திய பேச்சுவாா்த்தை பலனளிக்கவில்லை.

இதையடுத்து தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், பாஜகவில் விலகுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், காங்கிரஸில் சேருவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஹூப்பள்ளியில் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த ஷெட்டரை, ஞாயிற்றுக்கிழமை இரவு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் (கா்நாடக பொறுப்பாளா்) ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோரை ஷெட்டா் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

இந்நிலையில், திங்கள்கிழமை காலை (ஏப்.17) காங்கிரஸ் அலுவலகம் வந்த ஷெட்டர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார். 

பின்னர், பேசிய காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார்,  முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் மற்றும் பல எம்.பி.க்கள் நிபந்தனையின்றி காங்கிரஸில் சேர விரும்புவதாகவும், அவர்கள் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஷெட்டருக்கு காங்கிரஸில் ஹூப்பள்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com