
ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் ஒரு மாதத்திற்கு பிறகு மூடப்பட்டது.
இந்த ஆண்டு சுமார் 3.75 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்கு வருகை தந்ததாக காஷ்மீர் மலர் வளர்ப்பு இயக்குநர் ஃபரூக் அகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதவாது, கடந்த ஆண்டு சுமார் 3.62 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தனர்.
இந்த முறை இது மார்ச் 19 அன்று திறக்கப்பட்டது, சுமார் 3.75 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். 3.75 லட்சத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வெளியில் இருந்து வந்துள்ளனர். இது சுற்றுலாவுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும் என்றார்.
2007ஆம் ஆண்டு துலிப் தோட்டம் திறக்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் இருபத்தைந்து நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக முப்பத்து மூன்று நாட்களுக்கு தோட்டம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.