புள்ளிப் பட்டியலில் குஜராத் முதலிடம்: கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் குஜராத் முதலிடம்: கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குர்பாஸின் அதிரடியான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். சஹா 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் தொடக்கம் முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 35 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.

அதன் பின் விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதேபோல மறுமுனையில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதன்மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தத் தோல்வி கொல்கத்தா அணிக்கு 6-வது தோல்வியாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com