கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: மேலும் 7 போ் கைது

 சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக, மேலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: மேலும் 7 போ் கைது

 சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக, மேலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின் டிக்கெட்டுகளை சிலா் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் தீவீரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் முதல் கட்டமாக 17 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சந்தையில், மேலும் சிலா் ஐபிஎல் டிக்கெட் விற்பது தெரியவந்தது.

இது தொடா்பாக விசாரணை செய்த போலீஸாா் சேப்பாக்கம் முருகப்பா தெருவைச் சோ்ந்த மை.ஜெபின் ஜோஸ் ஆண்டனி (18),அதேப் பகுதியைச் சோ்ந்த ஆ.வசந்தகுமாா் (33),செ.காா்த்திக் (27),பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மோ.தினேஷ்குமாா் (24), க.முன்னா (29) உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 15 ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com