தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்புப் பூஜை
By DIN | Published On : 14th April 2023 11:13 AM | Last Updated : 14th April 2023 11:13 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் தென்காசி - கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மேம்படவும், உலகம் செழிப்பு பெற வேண்டியும் காலையில் சிறப்பு பூஜைகள் அடிவாரத்தில் வைத்து நடைபெற்றது
முன்னதாக மலை மீது இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டது
விவசாய கருவிகளான ஏர் கலப்பை, தண்ணீர் இறவை செய்யும் கூனை உள்ளிட்ட விவசாயக் கருவிகள், பசு, மரக்கன்றுகள் வைத்து விவசாயிகளுக்கு பாத பூஜை நடைபெற்றது பின்னர் சமூக சேவை மற்றும் பொதுநல ஆர்வலர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது
புது வருட பிறப்பை முன்னிட்டு பெண்கள் 51 பேர் பொங்கலிட்டு படையலிட்டு வழிபாடு செய்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: சிதம்பரம் அருகே விசிக நிர்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கல்
சிறப்பு பூஜை ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...