துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆகப் பதிவு
By DIN | Published On : 17th April 2023 08:13 AM | Last Updated : 17th April 2023 08:13 AM | அ+அ அ- |

துருக்கியின் அப்சின் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் அப்சினில் இருந்து தென்மேற்கில் 23 கிமீட்டரில் 10 கிமீ ஆழத்தில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளிழப்புகள் குறித்த எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.