சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு தொடக்கம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு தொடக்கம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைய வாய்ந்த சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் நேற்று  துவங்கியது.  

இதற்காக கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது மண்ணில்  புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள், பூர்ண புஷ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் சீர்காழியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடு 462 ஆம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. 

அதனை தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரம்மாசாரியர் நேரில் பார்வையிட்டார். மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பார்வையிட்டு சென்றார். 

இதனை அடுத்து சட்டைநாதர் கோயில் வளாகத்தில் மீட்கப்பட்ட சிலைகள் அணைத்தும் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டது.  

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை சேர்ந்த முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி, ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட  6 பேர்  கொண்ட குழுவினர் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு வருகை புரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை, பாதுகாப்பு பெட்டக சீல் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் அகற்றப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் செப்பேடுகள் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கப்பட்டது. 

பின்னர்  குழுவினர் செப்பேடுகளை ஆய்வு செய்ய தொடங்கினர். ஆய்வின் மூலம் இந்த செப்பேடுகள் எந்த காலத்துடன் தொடர்புடையது, இவற்றில் உள்ள தகவல்கள் என்னென்ன என்பது குறித்து முழுவதும் தெரியவரும் என்றும், இதுவரை தமிழ்நாட்டில் ஓலை சுவடியில் மட்டுமே பதிகங்கள் எழுதப்பட்டுள்ளதாகவும் முதன்முறையாக அதிக அளவு திருப்பதிகம் செப்பேடுகளில் எழுதப்பட்டு, தற்போது இங்கு சீர்காழியில் தான் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com