13 நகரங்களில் வெயில் சதம்
By DIN | Published On : 18th April 2023 02:37 AM | Last Updated : 18th April 2023 02:37 AM | அ+அ அ- |

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: சென்னை101.60 டிகிரி, கோவை 101.3 டிகிரி, தருமபுரி 102.2 டிகிரி, ஈரோடு 105.8 டிகிரி, பரமத்திவேலூா் 105.44 டிகிரி, மதுரை நகரம் 103.64 டிகிரி, மதுரை விமானநிலையம் 102.2 டிகிரி, நாமக்கல் 103.1டிகிரி, சேலம் 105.08 டிகிரி, தஞ்சாவூா் 100.4 டிகிரி,திருச்சி 103.46, திருப்பத்தூா் 103.64 டிகிரி,திருத்தணி 103.1டிகிரி வேலூா் 103.64 டிகிரி என்ற அளவில் வெப்பம் பதிவானது.
வட வானிலை: செவ்வாய், புதன்கிழமை இரு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.20, 21) இரு நாள்கள் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி குறைந்த பட்ச வெப்ப நிலை 80 டிகிரி என்ற அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.