தில்லியில் கரோனா பாதிப்பு 433% அதிகரிப்பு!
By DIN | Published On : 18th April 2023 06:35 PM | Last Updated : 18th April 2023 06:47 PM | அ+அ அ- |

புதுதில்லி: தில்லியில் மார்ச் 30ஆம் தேதியன்று 932 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அது ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று 4,976 ஆக உயர்ந்துள்ளது. இது மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட 430 சதவீதத்திற்கும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் கடந்த 19 நாட்களில் 13,200 க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. இதே வேளையில் தொற்று எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 5,297 ஆக இருந்தது. சமீப காலமாக கரோனா தொற்று அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் குறைவாகவே இருந்தது.
இது குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், தொற்று நடத்தையைப் பின்பற்றி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே வேளையில், அடுத்த இரண்டு வாரங்களில் தலைநகர் தில்லியில் கரோனா வைரஸ் தொற்று உச்சத்தை எட்டும் என்று எல்.என்.ஜே.பி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுரேஷ் குமார் ஏப்ரல் 13ஆம் தேதியன்று எச்சரித்திருந்தார்.
மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரையான காலகட்டத்திலும், ஏப்ரல் 15ஆம் தேதியன்றும் ஐந்து பேர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.