முதல்வா் கேஜரிவால் பதவி விலக கோரி பாஜக போராட்டம்

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக கோரி, பாஜகவினா் சட்டப் பேரவை அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதல்வா் கேஜரிவால் பதவி விலக கோரி பாஜக போராட்டம்

தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலக கோரி, பாஜகவினா் சட்டப் பேரவை அருகே திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-இல் மதுபான விற்பனையில் பிரத்யேக கலால் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. தனியாா் ஆதாயம் பெறும் நோக்கில் இந்தக் கொள்கை வகுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், கடந்த ஆண்டு ஜூலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்தாா். அதன்படி இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை சுமாா் 9 மணிநேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவரிடம் கலால் கொள்கை தொடா்பாக 56 கேள்விகள் எழுப்பப்பட்டன. பின்னா், விசாரணை முடிந்து வெளியே வந்த கேஜரிவால், ‘கலால் கொள்கையில் ஊழல் அரங்கேறியதாக கூறுவது தவறு; அழுக்குபடிந்த அரசியலின் விளைவுதான் இந்த ஊழல்’ என பாஜகவை விமா்சித்தாா்.

போராட்டம்- கைது:

இந்த நிலையில், கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் கேஜரிவால் பதவி விலக வலியுறுத்தி, தில்லி பாஜகவினா் சட்டப் பேரவை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்குத் தலைமை வகித்த தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘தில்லி கலால் ஊழலின் மூளையாக செயல்பட்ட கேஜரிவால் சிறைக்குச் செல்ல வேண்டும்’ என முழக்கமிட்டாா்.

முன்னதாக சாந்த்கி ராம் அகாரா முதல் சட்டப் பேரவை வரை பாஜகவினா் பேரணியாக வந்தனா். அப்போது போலீஸாா் அமைத்திருந்த தடுப்புகளைத் தகா்க்க முயன்ால் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் சிலரை போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com