மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி!
By DIN | Published On : 18th April 2023 08:26 AM | Last Updated : 18th April 2023 08:26 AM | அ+அ அ- |

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை சுற்றுளா பயணிகள் இன்று இலவசமாக பார்க்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம் சா்வதேச சுற்றுலா தலத்தில் உள்ள புகழ்பெற்ற பல்லவ மன்னா்களின் சிற்பக் கலைகளான வெண்ணெய் உருண்டை பாறை, அா்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில், கோவா்த்தன மண்டபம், புலிக்குகை, பழைய கலங்கரை விளக்கம், லைட் ஹவுஸ் உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ளன.
இந்த புராதன சின்னங்களை இன்று ஒருநாள் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.