தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் அபாயம்

சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 98.6  முதல் 100.4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும்
தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் அபாயம்


சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 98.6  முதல் 100.4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்றும், பொதுவாக தமிழகத்தில் வெப்பம் வழக்கமான அளவை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைத் தவிர, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், புதன்கிழமை இரு நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.20, 21) இரு நாள்கள் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி குறைந்த பட்ச வெப்ப நிலை 80 டிகிரி என்ற அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரம்..
தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் திங்கள்கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: சென்னை101.60 டிகிரி, கோவை 101.3 டிகிரி, தருமபுரி 102.2 டிகிரி, ஈரோடு 105.8 டிகிரி, பரமத்திவேலூா் 105.44 டிகிரி, மதுரை நகரம் 103.64 டிகிரி, மதுரை விமானநிலையம் 102.2 டிகிரி, நாமக்கல் 103.1டிகிரி, சேலம் 105.08 டிகிரி, தஞ்சாவூா் 100.4 டிகிரி,திருச்சி 103.46, திருப்பத்தூா் 103.64 டிகிரி,திருத்தணி 103.1டிகிரி வேலூா் 103.64 டிகிரி என்ற அளவில் வெப்பம் பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com